கண்ணீரோடு சீரியலில் இருந்து விலகுவதை அறிவித் நாம் இருவர் நமக்கு இருவர் ரசிதா. வைரலாகும் பதிவு.

கண்ணீரோடு சீரியலில் இருந்து விலகுவதை  அறிவித் நாம் இருவர் நமக்கு இருவர் ரசிதா. வைரலாகும் பதிவு.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விஜய் டிவியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இரு க்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நம க்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நம க்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இரு க்கிறது அதே போல இந்த சீரியலில் இதற்கு முன்பாக வேறு நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அவர்கள் இந்த சீரியலில் இருந்து விலகினார்கள். இதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரட்சிதா இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் இந்த சீரியலை விட்டு விலகுவதாக சமீபகாலமாகவே பேச்சு அடிபட்டது.

ரக்ஷிதா தற்போது கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த ரட்சிதா, கண்ட மேனிக்கு புரளி கிளப்பும் யூடுயூப் பக்கங்கள் கொஞ்சம் உண்மையை எழுதுமாறு கூறி இருந்தார். அதே போல நான் சீரியலில் இரு க்கிறேனா இல்லையா என்பது எனக்கே தெரியாது என்றும் கூறி இருந்தார்.

மேலும், நான் சீரியலில் இரு க்கிறேனா இல்லையா என்பதை நீங்கள் இயக்குனர் மற்றும் சீரியல் தரப்பில் தான் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், இவர் நிச்சயம் சீரியலில் இருந்து விலகிப்போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டாவில் ‘பாய் மகா’ என பதிவு செய்து செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply