ஒரே நாளில் கருவளையங்கள் காணாமல் போக வேண்டுமா??? இதனை செய்து பாருங்கள்… news v tamil / beauty tips

அழகு குறிப்பு

இன்று ஏராளமானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் கருவளையம். இந்த கருவளையங்கள பல்வேறு காரணங்களினால் ஒருவருக்கு வருகின்றன. அவற்றில் தூக்கமின்மை, அதிகமாக புகை பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு முறை, சுற்று சூழல் மாசுபாடு ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.

இப்படிப்பட்ட கருவளையங்களை சரியான பராமரிப்புகளின் மூலம் நிரந்தரமாக போக்க முடியும். அதிலும் நம் வீட்டில் உள்ள சில எளிமையான குறைந்த அளவு பொருட்களே இதற்கு போதுமானது. அதனை எப்படி செய்து பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கற்றாழை:
கற்றாழை சருமத்தில் வரட்ச்சியை போக்கி சரும செல்களுக்கு ஊட்டச் சத்தினை அளித்து கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தை இறுக்கமடையச் செய்யும்.
அதற்கு நல்ல கற்றாழையை வெட்டி அதனுள் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். பின் அதனை கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பின் 10லிருந்து 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு நீரில் நனைத்த பஞ்சை வைத்து துடைத்து எடுக்கவும்.
இதனை தினமும் செய்வதன் மூலம் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.

புதினா:
புதினா இலைகளில் உள்ள விட்டமின் C கண்களை சுற்றி உள்ள கருவளையங்களை போக்க பெரிதும் உதவுகின்றது. மட்டுமல்லாமல் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.
அதற்கு ஒரு கை அளவு புதினா இலைகளை நீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். பின் அதனை கண்களை சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.
இதனை தினமும் இரவு படுக்கும் முன் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்:
மஞ்சளில் சருமத்தை பிரகாசமாக்கும் ஏஜெண்டுகள் ஏராளமாக உள்ளன. இவை சருமத்தில் உள்ள கருமையை குறைக்க உதவுகிறது.
அதற்கு ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் உள்ள பிளீச்சிங் பண்புகள் சரும கருமையை போக்க உதவுகிறது. மேலும் உருளைக்கிழங்கு கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும்.
அதற்கு உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து பின் அதன் தோலை நீக்கி விட்டு துருவி கண்களை சுற்றி வைத்திருக்க வேண்டும்.
இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள்.
இப்படி தினமும் இரவு படுக்கும் முன் செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

எலுமிச்சை சாறு:
நம் எல்லோருக்கும் தெரியும் எலுமிச்சை சாற்றில் விட்டமின் c உள்ளது. மேலும் இது சருமத்தில் உள்ள கருமையை போக்க பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக எலுமிச்சை சாறு கருவளையங்களை விரைவில் நீக்கும்.
அதற்கு எலுமிச்சை சாற்றினை பஞ்சுருன்டையில் நனைத்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் காலை மாலை இரண்டு வேலையும் செய்து வந்தால் விரைவிலேயே நல்ல மாற்றம் தெரியும்.
இதனை செய்த பின் தேங்காய் எண்ணையை தடவ வேண்டும்.

மேலே குறிப்பிற்றவற்றை தவறாமல் செய்தால் கண்டிப்பாக விரைவில் கருவளையங்கள் நிரந்தரமாக மறைந்து விடும்.

Leave a Reply