ஒரு ஆணை காதலித்த இரண்டு பெண்கள்…. பூவா? தலையா? போட்டு திருமணம் முடிவு!! புலம்பும் 90’s கிட்ஸ்..

இந்தியா

இரண்டு பெண்கள்.. ஒரு காதலன்.. திருமணம் செய்து கொள்ள அடம் பிடித்த பெண்களை பூவா தலையா போட்டு பார்த்து ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிய சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் ஒரே இளைஞரை காதலித்து வந்துள்ளனர். அவரும் சலித்துக் கொள்ளாமல் இந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். அனைத்தும் சுமூகமாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் யாரை திருமணம் செய்து கொள்வது என்று கேள்வி எழுந்ததில் தான் ஆரம்பித்தது சிக்கல்.காதலனை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என இரு பெண்களும் அடம் பிடித்துள்ளனர். தங்களிடையே தீர்வு காண முடியாததால் இதனை ஊர் பஞ்சாயத்திடம் எடுத்து சென்றனர்.

ஊர் பெரியவர்கள் இதில் தலையிட்டு சமாதனம் செய்ய முயன்ற போதிலும் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. காதலனை திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்த இரண்டு பேரும் ஒரு கட்டத்தில் ஊர் பஞ்சாயத்து கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கூறினர்.

இதனையடுத்து கிரிக்கெட் போட்டியில் செய்வது போல பூவா? தலையா? என பார்க்க உள்ளதாகவும் அதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கே காதலனுடன் திருமணம் என கூறினார். இதற்கு இரண்டு பெண்களும் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் டாஸ் போட்டு பார்த்ததில் ஒரு பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கே காதலனை திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

ஆனால் தோல்வியடைந்த மற்றோரு பெண் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அந்த பெண்ணை அழைத்த மணமகள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு கட்டத்தில் கட்டியணைத்து அன்பை பொழிந்தார்.

ஆனாலும் மனம் பொறுக்க முடியாத அந்த பெண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த காதலனுக்கு பளார் என ஒரு அரை கொடுத்து விட்டு அங்கே இருந்து கிளம்பினார். அதன் பின்னர் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்தும் எந்த வித கவலையும் இன்றி ஜாலியாக இருந்தார் மாப்பிள்ளை .

இந்த சம்பவம் போலீசாரின் கவனித்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சமரசமான முறையில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரிய வந்ததும் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் இணைய வாசிகள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. அதில் 90’s கிட்ஸ் பலரும் ‘எங்கள் சாபம் உன்ன சும்மா விடாது’ என கமென்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply