ஐபிஎஸ் ஆக தகுதியே இல்லை என சந்தியாவை அசிங்கப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார் கௌரி.இன்றய 19/10/2022எபிசோட்

ஐபிஎஸ் ஆக தகுதியே இல்லை என சந்தியாவை அசிங்கப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார் கௌரி.இன்றய 19/10/2022எபிசோட்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் RAJA RANI 2. இன்றைய எபிசோடில் சந்தியாவின் முடி கம்பியில் மாட்டிக்கொள்ள கௌரி மேடம் நீ ஐபிஎஸ் ஆக தகுதியே இல்லாத ஆள். நீ பல போலீசுக்கு முன் மாதிரியா இருக்கணும் ஆனா உன்னை யார் முன் மாதிரியா எடுத்துக்க முடியும் என சத்தம் போடுகிறார். நாளைக்கு நீ முடிவெட்டி இருக்கணும் இல்லன்னா பிட்னஸ் கிளாஸ் போயிட்டு அடுத்த வருட பேச்சில் வந்து ஜாயின் பண்ணு என கூறுகிறார்.

பிறகு சந்தியா எதுவாக இருந்தாலும் அத்த இடமே கேட்டு பண்ணலாம் அப்படி பண்ணாமல் போனதால் தான் நிறைய பிரச்சனை வந்தது என முடிவு செய்து சிவகாமிக்கு போன் பண்ண சிவகாமியிடம் விஷயத்தை சொல்ல முடியாமல் எல்லோரும் போனை மாறி மாறி வாங்கி பேசுகின்றனர். பிறகு சரவணனிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார்.

மேடம் முடி வெட்ட சொன்ன விஷயத்தை சொல்ல சரவணன் அம்மா இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே என கூறுகிறார். ஆனா கட்டாயம் முடி வெட்டியாகணும்னு சொல்றாங்க, என்ன பண்றது என சந்தியா கேட்க சரி நீங்க முடி வெட்டுங்க நான் அம்மா கிட்ட சொல்லிக்கிறேன் என சொல்ல சந்தியா சந்தோஷமடைகிறார். அடுத்து அர்ச்சனா சந்தியா முடிவெட்டி மாடலா வந்து இறங்கினா எப்படி இருக்கும் என சொல்ல சிவகாமி அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் என கூறுகிறார். இதை எப்படி சமாளிக்கிறது என சரவணன் குழம்புகிறார்.

அடுத்ததாக சந்தியா முடிவெட்ட வருத்தப்பட முடி வெட்டுபவர் ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க பயம் பதற்றம் எல்லாமே உங்க முகத்துல தெரியுது என சொல்கிறார். அந்தப் பக்கம் அக்பர் கடுமையாக பயிற்சி செய்து கொண்டிருக்க சந்தியா இவரை வெற்றி பெற்று எப்படி கோப்பையை வெல்வது என யோசிக்கிறார். அடுத்ததாக முடிவெட்டியதும் சந்தியா சரவணனுக்கு VIDEO கால் செய்ய எல்லோரும் இருப்பதால் சரவணன் போனை எடுக்காமல் இருக்கிறார்.

பிறகு எல்லோரும் சரவணனிடம் சந்தியாவுக்கு VIDEO கால் பண்ணு அவளை பார்க்கணும் என கேட்க வேறு வழியில்லாமல் VIDEO கால் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய RAJA RANI 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply