எழிலுக்கு வர்ஷினி கொடுத்த அதிர்ச்சி.. கோபி செய்த வேலை – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் 11/11/2022அப்டேட்

எழிலுக்கு வர்ஷினி கொடுத்த அதிர்ச்சி.. கோபி செய்த வேலை – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் 11/11/2022அப்டேட்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

எழிலுக்கு வர்ஷினி எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது தோழி ஒருவர் போனை எடுத்து வந்து செல்பி எடுக்கலாம்

என சொல்ல இனியா போனை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரிஸ்சிபல் பார்த்து மாட்டிக்கொள்கின்றனர். நாளைக்கு உங்க வீட்ல இருந்து பேலன்ஸ் கூட்டிட்டு வரணும் இல்லனா வராதீங்க என கூற அதிர்ச்சி அடைகிறார்கள்.

இந்த பக்கம் எழில் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது வரும் வர்ஷினி உங்க வீட்டுக்கு போய் இருந்தேன் என விஷயத்தை சொல்ல நீங்க எதுக்கு என்கிட்ட சொல்லாம என் வீட்டுக்கு போறீங்க என கோபப்படுகிறார். உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் என்ன ரொம்ப புடிச்சிருக்கு எல்லாரும் ரொம்ப ஸ்வீட் என கூறுகிறார். அமிர்தா கூட அடிக்கடி போகிறது இல்ல நீங்க எதுக்கு போறீங்க என கேட்க அவங்க போகலைன்னா என்ன நான் போவேன் எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு இல்ல. நான் சொல்றத நீங்க புரிஞ்சுக்கல. உங்க வீட்ல இருக்க உங்களுக்கு புரிய வைப்பேன் என சொல்கிறார். அவர்களையே வர்ஷினியை திருமணம் பண்ணிக்கனு சொல்ல வைப்பேன் என கூறுகிறார்.

அதன் பிறகு செழியன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வர கோபி பழம், ஸ்வீட் உள்ளிட்டவைகளை கொடுத்து வீட்டில் கொடுத்து விடு ஜெனியை நல்லா பாத்துக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என அறிவுரைகளை வணங்குகிறார்.

அடுத்து எழில் அமர்த்தாவுக்கு போன் செய்ய அமிர்தாவின் குரலில் தயக்கம் இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்க அதற்குள் அமிர்தாவின் பெற்றோர் எழிலிடம் பேச வேண்டாம் போனை கட் பண்ணு என போனை வைக்கின்றனர். முதலில் வீட்டில் இருந்து யாரையாவது அழைத்து வந்து பேசட்டும் அதுவரைக்கும் நீ கொஞ்சம் விலகியே இரு என சொல்கின்றனர்.இனியா வீட்டுக்கு டல்லாக இருக்க ஸ்கூலில் நடந்தது என்ன என கேட்க அவள் அமைதியாக இ ரு க் கி றார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் எபிசோடு முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply