என்னது விஜய்சேதுபதிக்கு ஜோடி ஷிவானியா!!! ஏன் பா இந்த முடிவு… கோபத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்!!

என்னது விஜய்சேதுபதிக்கு ஜோடி ஷிவானியா!!! ஏன் பா இந்த முடிவு… கோபத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி கொண்டிருக்கும் படம் தான் “விக்ரம்”. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதே போல் விஜய்சேதுபதி, பகத் பாசல் மேலும் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் படம் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்சால் தயாரிகப்படுகிறது. இந்த படத்தில் அனிருத் இசை அமைப்பாளராக இருக்கிறார்.

விக்ரம் படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு காரைக்குடியில் நடக்க உள்ளது. காரைக்குடியில் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதியின் படக்காட்சிகள் படமாக்க உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக ஒருவர் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அது யாரெனில் பிக் பாஸ் சீசன் 4 ல் பங்கு பெற்ற ஷிவானி நாராயணன் தான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைகாட்சியின் இரட்டை ரோஜா ஆகிய தொடர்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவருக்கு நிறைய ரசிகர்களும் உண்டு. ஆனாலும் பிக் பாஸ் மூலமாக haterகளையும் தேடிக் கொண்டார்.சமீபத்தில் ஷிவானி அவர்கள் விஜய்சேதுபதியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் மிகவும் வைரலாக பகிரப்பட்டது.

இந்நிலையில் ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் நடிக்க போவதாகவும் அதுவும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இதனை கேள்விப்பட்ட ஷிவானியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவரது ஹேட்டர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ஏன் பா இந்த முடிவு வேற ஆளே இல்லையா என தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply