என்னது ஒரு வேப்பங்குச்சியின் விலை 1800 ரூபாயா!!!! அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் நீம் பிரஷ்…

என்னது ஒரு வேப்பங்குச்சியின் விலை 1800 ரூபாயா!!!! அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் நீம் பிரஷ்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

அமெரிக்காவில் ஒரு வேப்பங்குச்சியின் விலை 1800 ரூபாயாம். இதனை கேட்ட இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நமது ஊரில் மிகவும் எளிதாக கிடைக்கும் ஒன்று தான் வேப்பங்குச்சி. அதுவும் கிராமப்புறங்களில் வீட்டிற்க்கு பல வேப்பமரங்கள் இருக்கும். குறைந்தது ஒரு வேப்ப மரமாவது ஒரு வீட்டில் நம்மால் பார்க்க முடியும்.

இதற்கு காரணம் வேப்ப மரத்தையும் தமிழர்களையும் பிரிக்கவே முடியாது. அந்த அளவிற்கு தமிழர்களின் பாரம்பரியத்தில் வேப்ப மரம் ஒரு அங்கமாகவே உள்ளது.
கோவில் திருவிழாக்களில் ஆரம்பித்து வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தாலோ அல்லது நோய் நொடிகள் வந்திருந்தாலோ வேப்ப மரம் பெரும் பங்கு வகிக்கும். இந்த கொரோனா சூழ்நிலையில் கூட நிறைய பேர் வேப்ப இலையை அரைத்து தங்களது வீட்டின் முன் தெளித்து வந்தனர்.

ஏனெனில் வேப்ப இலையை பொறுத்த வரை மிகப் பெரிய கிருமி நாசினி என்பது நம் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் 1000 வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என கூறினர். வேப்பங்குச்சியில் பல் துலக்கும்போது எந்த ஒரு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் வராது என்பது நம் முன்னோர்களின் கருத்து.

இப்பேர் பெற்ற வேப்பங்குச்சியின் அருமை நமக்கு தெரிகிறதோ இல்லையோ வெளிநாட்டினருக்கு நன்றாக தெரிந்து உள்ளது. அதனால் தான் அதன் விலையை 1800 ரூபாய்க்கு விற்கின்றனர். வேப்பங்குச்சிகளை organic toothpaste என்ற பெயரில் ஒரு வேப்பங்குச்சியை 1800 ரூபாய்க்கு அமெரிக்காவை சேர்ந்த ecommerce நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த விஷயம் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தியை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நமது கிராமங்களில் சாதரணமாக கிடைக்கக் கூடிய வேப்பங்குச்சியை அமெரிக்காவில் 15 டாலர் கொடுத்து நிறைய பேர் வாங்கி செல்கின்றனர். இது மிகவும் ஆச்சிரியம் அளிக்கிறது என கூறினார்.

தலையில் பொடுகு, முகத்தில் பரு, வீட்டில் பூச்சி தொல்லை , போன்றவற்றிற்கு வேப்பலையை அரைத்து தேய்த்தாலே போதும். மேலும் நோய் காலத்தில் வீட்டின் வாசலில் வேப்பலையை மஞ்சளுடன் சேர்த்து வீட்டின் வாசலில் தெளிப்பது மற்றும் கோடைக்காலத்தில் குடிக்கும் நீரில் சிறிது வேப்பிலையை கலந்து குடிப்பது போன்ற வழிகளை நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர்.

இப்படி மருத்துவ குணம் நிறைந்த வேப்ப மரத்தின் அருமை நமக்கு தெரிவதில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் வீட்டிற்க்கு ஒரு வேப்ப மரம் இருந்தாலும் யாருமே வேப்பங்குச்சியில் பல் துலக்குவதில்லை. வெளிநாட்டினர் கண்டு பிடித்த பேஸ்ட் மற்றும் பிரஷ் கொண்டு தான் பல் துலக்குகிறோம்.

ஆனால் வெளிநாட்டினர் இதன் குணங்களை தெரிந்து கொண்டு இதனை 15 டாலருக்கு விற்கின்றனர். அதாவது இந்திய மதிப்பிற்கு 1800 ருபாய்.. இனிமேலாவது நாம் வேப்ப மரத்தை பயன்படுத்திக்கொள்வோம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply