உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை விளக்கும் காணொளி

உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை விளக்கும் காணொளி

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை விளக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை கவனிக்க வைக்கிறது.

சாமர்த்தியம் என்பது விலை மதிக்க முடியாதது. சிலருக்கு என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சாமர்த்தியம் என்பது இருக்காது. ஆனால் சிலரோ, வறுமையில் தான் இருப்பார்கள். ஆனால் அவர்களது சாமர்த்தியம்யோ வேற லெவலில் இருக்கும். சாமர்த்தியம் என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு சாமர்த்தியம் இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும்.

அதிலும் சிலரை பார்த்த முதல் தோற்றத்திலேயே மிகவும் குறைவாக மதிப்பிட்டு விடுகிறோம். வாட்ட சாட்டமான உடல், உடுத்தியிருக்கும் உடை ஆகியவற்றை வைத்தே நாம் அவர்களை எடைபோடுகிறோம். சிலரை நாம் எப்போதுமே ‘அண்டர் எஸ்டிமேட்’ செய்து விடுகிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இளைஞர்கள் குழுவாக சேர்ந்து கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கொஞ்சம் உயரமான பையன் செம கெத்தாக நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க ஒரு சிறுவன் வந்தான். இதை ரொம்பவே அலட்சியத்தோடு எதிர்கொண்ட அந்த கபடி பாடி வந்தவர் அசட்டையாக நின்றார். ஆனால் அந்த பொடியனோ அசால்டாக அவனை மடக்கிப் பிடிக்க, அந்த டீமே சேர்ந்து செம கெத்தாக நின்றவரை பிடித்துப் போட்டு அவுட்டாக்கியது. யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்னும் கேப்சனோடு இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply