இப்படி ஒரு நிலைமையை !!பொது மேடையில் டைரக்டரின் மானத்தை வாங்கிய புரூஸ்லீ ஹீரோயின்!

இப்படி ஒரு நிலைமையை !!பொது மேடையில் டைரக்டரின் மானத்தை வாங்கிய புரூஸ்லீ ஹீரோயின்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

‘புரூஸ்லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக க்ருதி கர்பந்தா என்ற தமன்னா 2 வை இறக்கியிருக்கிறார்கள். நின்றால், நடந்தால், சிரித்தால், முறைத்தால், எல்லா ஆங்கிளிலும் தமன்னா போலவே இ ரு க் கி றா – ர் இந்த க்ருதி. பொதுவாக முதல் பட ஹீரோயின்கள், மொழி புரியாத ஊர்ல வந்து மைக்கை குடுத்துட்டானுங்களே… என்ற திகில் பார்வையோடுதான் மேடை ஏறுவார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. அரட்டை என்றால் அரட்டை. அப்படியொரு அரட்டை.

ஒரு எக்சாம்பிள்…. புரூஸ்லீ படம் பொங்கலுக்கு வருவதாக இருந்ததல்லவா? இப்போது அந்த தேதியில் வரவில்லை. ஆனால் வருவதை அறிவிக்கும் பிரஸ்மீட் ஒன்று நடந்தது. இதில் பேச வந்தார் க்ருதி. பேசுவதற்கு முன்னால் இவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார் டைரக்டர் பிரசாந்த் பாண்டியராஜன். பேசும்போது என்னை பற்றியும் நாலு வரி நல்லவிதமா சொல்லும்மா என்பதாக இருக்கலாம்.

சிரித்துக் கொண்டே மைக்கை பிடித்த தமன்னா 2 “நம்ம டைரக்டர் பிரசாந்த் அவரை பற்றியும் கொஞ்சம் சொல்ல சொன்னார். அவர் நல்ல சாப்பாட்டு பிரியர். பிரியாணின்னா ரொம்ப இஷ்டம். அதைவிட இஷ்டம்… பொண்ணுங்களோட ஊர் சுத்தறது” என்று நீட்டிக் கொண்டே போக, பதறிப் போனார் பிரசாந்த். உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ஒரு கும்பிடு போட, போனால் போ – கி ற து என்று மிச்ச சொச்ச விஷயங்களை சொல்லாமல் நிறுத்திக் கொண்டார் க்ருதி.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது, “இந்தப்படத்தில் ஷுட்டிங் செலவை விட சாப்பாட்டு செலவுதான் அதிகமா போச்சு. ஏன்னா டைரக்டர் சாப்பாட்டு பிரியர் ” என்றார். வளைச்சு வளைச்சு படம் எடுப்பாங்கன்னு பார்த்தா, இப்படி கூத்தா அடிச்சு த ள் ளி – யி ருக்கீங்களே பிரசாந்த்? நீங்கள்லாம் நல்லா வரணும்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply