இனியாவுக்கு உதவ போய் பல்பு வாங்கியுள்ளார் கோபி.

இனியாவுக்கு உதவ போய் பல்பு வாங்கியுள்ளார் கோபி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும் பி ரப ல மா ன தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி இனியாவை பார்த்து ஸ்கூலில் அப்படியே நிற்க கொஞ்ச நேரத்தில் மயூரா வந்து வாங்க டாடி என அவரை கைப்பிடித்து அழைத்து பார்க்க இதை பார்த்த இனியா அதிர்ச்சி அடைகிறார்.

கோபி அந்த இடத்தை விட்டு சென்றதும் அக்கம் பக்கத்தினர் இனியா அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கினாரா என கேட்க பாக்யா இனியாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். பிறகு இனியவுக்காக பாக்யா டீச்சர் இடம் பார்த்து பேச அந்த பக்கம் ராதிகா கோபி பேச அப்போது மிஸ் இது யாரு என கேட்க ராதிகா என்னோட ஹஸ்பண்ட் மயூவோட அப்பா என கூறுகிறார். பிறகு கையெழுத்து போட்டு விட்டு கோபி இனியவுக்காக எப்போதும் நான் தான் வருவேன் நான் போய் பேசிட்டு வந்துடறேன் என சொல்லிவிட்டு இங்கு வந்து இனியாவிடம் டாடி வரவாடா என கேட்க வேண்டாம் அம்மா பேசிட்டாங்க என கூறுகிறார்.

அடுத்து மயூ கீழே வந்ததும் நீங்க எனக்கு யாரு என கேட்க டாடி என சொல்ல அப்போ இனியா அக்காவுக்கும் நீங்க டாடியா என கேட்க ஆமாம் என கோபி சொல்ல அது எப்படி என கேட்கிறார். முதல்ல இனியாவுக்கு டாடி இப்போ உனக்கு டாடி என சொல்லி காருக்குள் அனுப்பி வைக்கிறார். பிறகு ராதிகா கோபியை பயங்கர கோபத்துடன் பார்க்க என்ன ஆச்சு ராதிகா என கேட்க உங்க மேல தான் பயங்கர கோபத்தில் இருக்கேன்.

ஸ்கூலுக்கு வந்த வேலையை பார்க்க வேண்டியது தானே, நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல என ராதிகா கோபப்படுகிறார். அடுத்து பாக்கியா இனியாவுடன் ஹோட்டலுக்கு வந்து அவளுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து பின்னர் எதற்கும் வருத்தப்படாமல் படிப்பில் கவனம் செலுத்து என அறிவுரை கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply