இந்த சொட்டையில் உள்ள நாலு முடிய வெட்ட மாதத்திற்கு ஏழு லட்சமா!!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

முடி அலங்காரத்திற்கு மட்டும் 7 லட்சம் செலவு செய்கிறார் ஒரு ஜனாதிபதி. பிரான்சு நாட்டின் ஜனாதிபதியான பிரான்ஸ் வா ஹோலேன். இவர் கடந்த 2012ல் ஜனாதிபதியாக பதவி ஏற்றத்தில் இருந்து தனது முடி அலங்காரத்திற்கு மட்டும் மாதம் 7 லட்சம் செலவு செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரெஞ்ச் புலனாய்வு பத்திரிக்கை ஒன்று ஜனாதிபதி ஹோலேனின் ஆடம்பர செலவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டில் சோசியலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கடந்த 2012 ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

NEWS V TAMIL

இவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தனது முடி அலங்காரத்திற்கு மட்டும் மாதம் 7 லட்சம் செலவு செய்து வந்துள்ளார். இது குறித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியான உடன் பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் அந்த ஜனாதிபதியை வறுத்து எடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி குறித்து வெளியிட்ட பத்திரிக்கையில் அவரது முடி அலங்காரம் பற்றியும் முடிதிருத்தம் செய்யும் நபர் பற்றியும் அவரது சம்பளம் பற்றியும் செய்திகள் வெளியானது.இதனால் தற்போது அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

NEWS V TAMIL

இவருக்கு அலங்காரம் செய்ய ஒலிவர் என்ற 24 வயது இளைஞரை அவருடனே வைத்துள்ளார். இதற்காக ஒலிவருக்கு மாதம் 7 லட்சம் சம்பளம் கொடுக்கபடுகிறதாம்.

நாட்டின் வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை எல்லாம் தனது அலங்காரத்திற்கு இப்படி வீணாய் செலவிடுகிறார் என மக்கள் புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply