இந்தியாவில் VPN செயலிகளுக்கு தடை!!! மத்திய அரசு நடவடிக்கை…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
இந்தியாவில் இணைய பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருவது ஆரோக்கியமானதுதான் என்றாலும் ஆன்லைன் மூலமாக குறுக்கு வழியில் சில பேர் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
நேரடியாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதைக் காட்டிலும் மறைமுகமாக இருந்து கொண்டு மிகவும் சுலபமாகி விடுகின்றது. எனவே இம்மாதிரியான வேலைகளை சில பேர் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர்.

பண மோசடி மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்களை இணைய தளத்தில் பதிவேற்றமும் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட ஆபாச தளங்களுக்குள் நுழைந்து வீடியோக்களையும் பார்கின்றனர். மேலும் அதனை பதிவிறக்கம் செய்து shareம் செய்கின்றனர்.
அதே போல தடை செய்யப்பட்ட வீடியோ கேம்களையும் பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். அதன் மூலம் பல பேர் பணத்தை இழக்கவும் செய்கின்றனர்.
இது அனைத்திற்கும் VPN என்கின்ற virtual private network தான் மூல காரணியாக உள்ளது. சைபர் குற்றவாளிகள் அவர்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மறைப்பதற்கு இந்த VPN பேருதவியாக உள்ளது. குற்றவாளிகள் இணைய தளத்தில் என்ன தேடுகின்றனர்? அவர்கள் எந்தெந்த websiteகுள் செல்கின்றனர்? என்பதெல்லாம் மறைக்க VPN உதவின்றது.

அதாவது அவர்களது போனில் VPN ஆக்டிவேட் செய்து விட்டால் அவர்களது IP Adress மாறி விடும். இதனால் அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் VPN மூலமாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள வாறு காமித்து விடும். இதனால் அவர்களை track செய்ய நினைப்பது காவல் துறைக்கு பெரிய சவாலாக மாறி விடுகின்றது.
நல்ல விதமாக பயன்படுத்துபவர்களுக்கு VPN ஒரு பாதுகாப்பான சேவை தான். குற்றவாளிகள் இதனை தவறாக பயன்படுத்துவதால் அது ஆபத்தில் சென்று முடிகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் VPN க்கு தடை செய்தே ஆக வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்திருந்தது. அவர்கள் மதிய அரசுக்கு செய்த பரிந்துரையில் VPN மற்றும் dark websiteகள் சைபர் குழுவிற்கு பெரும் சவாலாக உள்ளது எனவும் இது பெரும் குற்றங்களுக்கு வழிவகை செய்கின்றது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகமும் IT அமைச்சகமும் சேர்ந்து செயல்பட்டு இணைய சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களின் உதவியுடன் VPNகளையும் dark websiteகளையும் கண்டறிந்து அவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.