அழுகிய பிணங்களுடன் உயிருக்கு போராடிய 3 வயது சிறுமி!!! உணவின்றி தவித்து உயிரிழந்த 9 மாத குழந்தை… குடும்ப தற்கொலை..

தமிழ்நாடு

பெங்களூருவை அடுத்த சேத்தன்செக்கள் பகுதியில் வசித்து வருபவர் ஷங்கர். இவர் சொந்தமாக பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அதன் ஆசிரியராகவும் உள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் சின்ஜனா, சிந்துராணி என இரு மகள்களும் உள்ளனர். மேலும் மதுசாகர் என்ற மகனும் உள்ளார்.

சம்பவத்தன்று ஷங்கர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது மனைவி பாரதி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஆகிய நான்கு பெரும் தூக்கிட்டு இறந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகில் 9 மாத பேர குழந்தை இறந்து கிடந்தது. உயிருக்கு போராடிய 3 வயது பேத்தி மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த குடும்ப தற்கொலைக்கு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஈகோவுடன் சண்டையிட்டது தான் காரணம் என தெரிவிக்கின்றனர். ஷங்கர்- பாரதி தம்பதியின் மூத்த மகளான சின்சனாவிற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமானது. அவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்ப்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து சின்சனா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

2வது மகள் சிந்துராணிக்கும், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 9 மாத ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அவர்களது மகனுக்கு யார் பெயர் சூட்டுவது என்ற தகராறில் கனவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் சிந்துராணி.

இந்நிலையில் இரு மகள்களையும் அவரவர் கணவர் வீட்டிற்கு சமாதனம் செய்து அனுப்பி வைக்கும்படி மனைவி பாரதியிடம் ஷங்கர் கூறியதால் கணவன் மனைவி இருவருக்கிடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது. மகள்களும் கணவர் வந்து அழைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று தந்தையிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே எஞ்சினியரிங் படித்துள்ள மகன் மதுசாகருக்கு சரியான வேலை இல்லாததால் அவரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே பாரதி மகனுக்கு பார் மற்றும் ரெஸ்டாரன்ட் வைத்து கொடுக்க வேண்டும் என கூறி அடம் பிடித்துள்ளார். இதற்க்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். தாயும் மகனும் விடாமல் அடம் பிடித்ததால் வேறு வழி இல்லாமல் ருபாய் 20 லட்சம் ஷங்கர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடிய போது இரு மகள்களும் கணவரிடம் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டில் வந்து இருப்பதால் சம்பந்தம் ஒன்றும் அமையவில்லை என்று கூறப்படுகிறது. கடுமையான மன உளைச்சல் ஏற்ப்பட்டதால் சொத்துக்களையெல்லாம் விற்று பணத்தை மனைவியிடம் கொடுத்து விட்டு அமைதியாக தனிமையில் வசிப்பதற்கு ஆசிரமம் அமைக்க 10 லட்சம் கேட்டதாகவும் அதற்கு குடும்பத்தினர் சம்மதிக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் ஷங்கர்.

இதனால் தனது மனைவியும், அவரது தூண்டுதலின் பேரில் இரு மகள்களும் மகனும் தற்கொலை செய்திருக்கலாம் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட நான்கு பேரும் 9 மாத ஆண் குழந்தையையும், 3 வயது சிறுமியையும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

இதில் அந்த 9 மாத குழந்தை நீண்ட நேரம் பாலுக்காக அழுது பசியால் மயங்கிய நிலையில் உயிரை விட்டதாக, நான்கு நாட்களாக அழுகிப் போன பிணங்களுடன் இருந்து மீட்கப்பட்ட அந்த 3 வயது சிறுமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதே போல அந்த சிறுமி தனது தாய் எப்படியும் இறங்கி வந்து விடுவார் என்று தூக்கில் தொங்கிய தாயிடமே இருந்துள்ளார். இந்நிலையில் வெளியூர் சென்ற ஷங்கர் வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்து உயிருக்கு போராடிய தனது பேத்தியை தூக்கி முதலுதவி கொடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சிறு சிறு சண்டைகாளால் ஏற்ப்பட்ட இந்த விபரீதம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Reply