அம்மாவின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன் – நெல்லை சிறுவனுக்கு குவியும் பாராட்டு

 அம்மாவின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன் – நெல்லை சிறுவனுக்கு குவியும் பாராட்டு

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஓவியர் ஆதிஸ். தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த சுபாஷினி ராஜேந்திரன் என்பவரை மதுரை திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோயிலில் நேற்று கல்யாணம் புரிந்தார். மணப்பெண்னான சுபாஷினி ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவர் ஏற்கெனவே கல்யாணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர்.

சுபாஷினிக்கு ஒன்பது வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார். அவரது அம்மாக்கு ஆதிசுடன் கல்யாணம் நடப்பதை ஆமோதிக்கும் வகையில் கல்யாணத்தின்போது மணப்பெண் சுபாஷினிக்கு கட்டப்படவிருந்த தாலியை சிறுவன் தர்ஷன் எடுத்துக் கொடுக்க, மணமகன் ஆதிஸ் அதை கட்டினார்.

நண்பர்களையே தங்களது உறவினர்களாகக் கொண்டு மணமக்கள் மாலை மற்றும் மெட்டி அணிவித்து கல்யாணம் செய்து கொண்டனர். பிறகு பெரியார் படத்தின் முன்பாக மாலை மாற்றிக் கொண்டனர். தனது மகனின் கையால் தாலியைப் பெற்று, தான் ஏற்றுக் கொண்ட மணமகன் மூலமாக அதனைக் கட்டிக் கொண்ட பேராசிரியை சுபாஷினியையும், மணமகன் ஆதிஸையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply