அம்மாடியோ !!கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்த நடிகை ரெஜினாவின் பதிவு இணையத்தில் வைரல் ஆகிறது !!.

அம்மாடியோ !!கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற  படத்தில் நடித்த நடிகை ரெஜினாவின் பதிவு இணையத்தில்  வைரல்  ஆகிறது !!.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் ரெஜினா சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தனது கல்யாணம் குறித்து சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் அது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.


தென்னிந்திய திரை உலகில் பிரபல ஹீரோயின் களில் ஒருவராக திகழ்பவர் தான் ஹீரோயின் ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தற்போது தமிழ் ,தெலுங்கு என இரு மொழியிலும் ஒரு சில படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவரது கல்யாணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் கூட இவருக்கு விரைவில் கல்யாணம் நடக்க போவதாகவும் வதந்திங்கள் வேகமாக பரவியது. இதனால் ஹீரோயின் ரெஜினா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தனது கல்யாணம் குறித்த தகவல்களை பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதில் அவர் “நான் ஒருவரை காதலித்தேன் சில காரணங்களால் எங்களது காதல் முறிந்துவிட்டது. அதிலிருந்து விடுபட நான் கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. கல்யாணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் கல்யாணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது தெரியாது” என்று கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply