அம்மாடியோ !!கியூட்டாக ஸ்டெப் போட்டு இருக்கும் வீடியோ ரிலீஸ் சிவாங்கி

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் நாயுடன் பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு கியூட்டாக ஸ்டெப் போட்டு இருக்கும் ரிலீஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
VIJAY TV ஒளிபரப்பான SUPER சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சிவாங்கி தனது நகைச்சுவையினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது மட்டுமின்றி தனக்கென தனி இடத்தையும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

தற்போது இந்நிகழ்ச்சியின் மூ ன் றா வ து சீசனில் பங்கேற்று இருக்கும் சிவாங்கி இதற்கிடையே சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு மகளாக “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் தற்போது நடித்துகொண்டிருக்கும் சிவாங்கி அடுத்தடுத்த புதிய படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் அதிக ஃபாலோவர்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கும் சிவாங்கி அடிக்கடி அவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது செல்ல நாயுடன் டான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பிரைவேட் பார்ட்டி என்ற பாடலுக்கு கியூட்டாக ஸ்டெப் போட்டு இருக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.