அட சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரமா இவர்?? சந்திரமுகி பொம்மிக்கு நடந்து முடிந்த திருமணம்!! ஆச்சர்யபட வைத்த வைரல் புகைப்படங்கள்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் இன்னுமே அனைவருக்குமே பிடித்த படம் சந்திரமுகி தான். கூடிய விரைவில் இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும் இந்த படத்தில் மிக பெரிய ஒரு பலமே இந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் தான். என்றுமே நினைவில் நிற்கும் படியான கதாபாத்திரங்களாக இருந்து வருகின்றன.

அப்படி இந்த படத்தில் நடித்து இருந்த ஒரு சிறுமியினை இன்றுமே அனைவருக்கும் நினைவு இருக்கும். ’சந்திரமுகி’ திரைப்படத்தில் பொம்மி என்ற குழந்தை நட்சத்திர கேரக்டரில் நடித்தவருக்கு தற்போது திருமணமாகி உள்ளதை அடுத்து திருமண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தில் ஒரு பாடலில் பொம்மி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பிரகர்ஷிதா.

இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு தான் வந்தாலுமே மக்கள் மத்தியில் பலருக்குமே தெரிந்த ஒரு முகமாக மாறிவிட்டார். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, பிரகர்ஷிதா ஒரு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த படத்தில் குழந்தையாக பார்த்து இருந்த சிறுமிதான் இப்போது திருமணம் செய்யும் அளவிற்கு வளர்ந்து பலரையுமே ஆச்சர்யபடுத்தி இருக்கிறார்.

இப்போது அந்த படத்தில் பொம்மியாக நடித்த பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. தனது கணவருடன் கூடிய புகைப்படங்களை இவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இப்போது உருவாக இருக்கும் சந்திரமுகி படத்திற்கான இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக வடிவேலு நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின, அதே போல அந்த படத்திலும் பிரகர்ஷிதா நடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.